Place to live in
India Nightlife is the coolest and fastest growing nightlife

Welcome to Surandai Portal      நிருபர் - திரு. அருண் - 9884678900

26-09-2015 -சுரண்டை சிவகுருனாதபுரம், திரு அயோத்தி ஜார்ஜ் அவர்களின் மனைவி திருமதி. விமலா கிரேஸ் ராஜம்மாள் இன்று காலை காலமானார்.
08-09-2015 -சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி முதல்நிலை கல்லூரியாக தரம் உயர்வு- Click here for details
08-09-2015 -2016 ல் மீண்டும் தென்காசி தொகுதியில் திரு சரத்குமார் போட்டி ?- Click here for details
05-09-2015 -சுரண்டை மகாத்மா காந்தி கருணை இல்லத்தில் பாவூர்சத்திரம் சென்ரல் லயன்ஸ் கிளப் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டன.

04-09-2015 -சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி தேர்வுக் கட்டணம் செலுத்த கல்லூரியில் தனி வங்கி கவுண்டர் அமைக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

29-08-2015 -சுரண்டையில் தே மு தி க தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழ இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

29-08-2015 -சுரண்டையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

29-08-2015 -சுரண்டையில் ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம் நடந்தது. - Click here for details
10-08-2015 -நேற்று (09-08-2015) திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சுரண்டை பொட்டல் மாடசாமி கோயில் திடலில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. - Click here for details
08-08-2015 -சுரண்டை காமராஜர் சாலையில் இருந்த தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் (TMB) தற்போது பொன்ரா மருத்துவமனை வடபுறம் மாற்றப்பட்டுள்ளது
30-07-2015 -கலாம் அவர்களுக்கு தினமும் தயிர் வழங்கிய சுரண்டைக்காரர் - Click here for details
28-07-2015 -சுரண்டை ஜெயேந்திரா பள்ளி அருகில் 13 சென்ட் நிலம் விற்பனைக்கு - மேலும் தொடர்புக்கு - 9884678900
27-07-2015 -சுரண்டை காமராஜ் அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கு புகார் தெரிவிக்க வசதியாக சுரண்டை பொலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் போஸ்ட் கார்ட் வழங்கினார்.

24-07-2015 -சுரண்டையில் ஒரு சென்னை ஏர்போர்ட்: சுரண்டை சிவகுருனாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி நுழை வாயில் முதல் காக்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து பல வருடங்களாகியும் சரி செய்யப்படாத நிலையில் கீழ் புறம் அமைந்துள்ள மற்றொரு சுவரும் இடிந்து தரை மட்ட மாகியது. உடனடியாக மீண்டும் உறுதியான சுவராக கட்ட தே மு தி க தொழிற் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

22-07-2015 -சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர்(பொ) ரா.ஜெயா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூலை 22ம் தேதி வரை விநியோகிக்கப்பட்டு அன்றைய தினம் வரை பெறப்படுகிறது. ஜூலை 28ம் தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டு முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 30ம் தேதி நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்று ஆடித்தபசுக்காக உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளதால், கலந்தாய்வு 3.8.2015(திங்கள்க்கிழமை) அன்று காலை 10 மணி முதல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
19-07-2015 -சுரண்டையில் ச ம க மாவட்ட துணை அலுவலகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

10-07-2015 -கடையநல்லூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அமைக்க ச.ம.க தலைவர் திரு சரத்குமார் ரூ 1 லட்சம் நிதி வழங்கினார்.

01-07-2015 -ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நகர செயலாளர் திரு செந்தூர் பாண்டியன் தலைமையில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

21-06-2015 -சுரண்டை பேருந்து நிலையத்தை MLA திரு சரத் குமார் ஆய்வு செய்தார்21-06-2015 -சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் பள்ளியில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.


20-06-2015 -சுரண்டை மெட்ரிக் பள்ளியில் 19-06-2015 அன்று பாலின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் vaNNam மாணவர்களால் பால் தினம் கொண்டாடப்பட்டது.


19-06-2015 -சுரண்டை பொலீஸ் ஸ்டேஷனில் மாவட்ட SP ஆய்வு செய்தார்


18-06-2015 -சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணாவர்கள் வரவேற்பு விழா நடந்தது.

17-06-2015 -சுரண்டை சிவகுருநாதபுரம் யூனியன் கிணறு அருகில் 4.5 சென்ட் நிலம் விற்பனைக்கு உள்ளது . மேலும் விவரங்களுக்கு 9884678900
12-06-2015 - சுரண்டை எஸ்.ஆர்.மெட்ரிக்குலேசன் பள்ளியில் வருகிற ஜூன் 14ல் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெறுகிறது.
வைரக்குதிரை சதுரங்க அமைப்பு சார்பில் நடைபெறும் இந்த போட்டியில் மழலையர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 5 பிரிவுகளின் கீழ் போட்டி நடைபெறுகிறது.
சதுரங்க போட்டியில் முதல் 3 இடங்களில் வருவோருக்கு பரிசு மற்றும் சான்றிதழும், கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்படும் என்றும், போட்டியில் கலந்து கொள்வதற்கான முன்பதிவை குறுஞ்செய்தி மூலம் 9442453107 என்று எண்ணில் பதிவு செய்யலாம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கே.மாரிச்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
10-06-2015 -சுரண்டை செங்கோட்டை ரோட்டில் பாலம் அருகே தாமிரபரணி கூட்டுக்குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய தே மு தி க மாவட்ட தொழிற்சங்க துணைத்தலைவர் சுரண்டை திரு A T முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்
10-06-2015 -சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான 2ம் கலந்தாய்வு வரும் 22 ஆம் தேதி நடக்கிறது.
10-06-2015 -சுரண்டை போஸ்ட் ஆபிஸில் ரயில் முன்பதிவு மையம் துவங்க வேண்டுமென தா மா கா மாநில செயலாளர் பரன்குன்றாபுரம் திரு NDS சார்லஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
01-06-2015 -சுரண்டை கல்லூரியில் தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது

           
           

    Travels in Tenkasi and Courtallam

    We arrange travels in Tenkasi and Courtallam. For details please contact - +91 9884678900

Which of these given pairs will create more expectation?
  
pollcode.com free polls